அதிமுக ஆட்சியில் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் கு ப கிருஷ்ணன் பேச்சு

அதிமுக ஆட்சியில் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் கு ப கிருஷ்ணன் பேச்சு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு ப கிருஷ்ணன் தீவிர தொடர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் தேர்தல் களம் உச்சம் பெற்றுள்ள நிலையில் திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் செக்போஸ்ட், சீனிவாசநகர், பல்லநந்தவனம், காந்திரோடு, முறக்காரதெரு, மொட்டைக்கோபுரம், அண்ணாநகர், சக்திநகர், ராகவேந்திரா கார்டன், ஆறுமுருகன் கார்டன், சிங்கப்பெருமாள் கோயில் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர் நகர் பர்மா காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய கு ப கிருஷ்ணன்.... அம்மாவின் அரசு மீண்டும் ஆட்சி அமைந்தால் குல விளக்கு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1500  வழங்கப்படும் எனவும், 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்படும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 கேஸ் சிலிண்டரும், வாஷிங்மிசின் ஒன்றும், சோலார் அடுப்பு ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என அம்மாவின் வெற்றி திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து பட்டியலிட்டு இந்த ஆட்சி மீண்டும் மலர அனைவரும் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அதிமுக ஆட்சியில் மட்டுமே ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள், சாமானியர்கள், வணிகர்கள் என அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். எனவே வருகின்ற தேர்தலில் அதிமுக இயக்கத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின் போது அதிமுக வட்ட செயலாளர் பொன்னர், அவைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81