பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பெரமூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி சுபாஷினி (40) . இவர் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது செவந்தலிங்கபுரம் என்ற இடத்தில் எதிரே சேலம் செவ்வாய்பேட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு தலைமை காவலர் சுபாஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ரமேஷ் தனது அம்மா சாந்தி தங்கை சுகன்யா நண்பர் வாசுதேவன் அவரது மனைவி நவநீதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சேலத்தில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுபாஷினியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷினியின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்துக்குள்ளான கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சீறிப்பாய்ந்து நின்றது.

இதில் காரில் பயணித்த வந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் லேசான காயம் அடைந்தனர். விபத்தில் இறந்து போன சுபாஷினிக்கு சுதர்சன்(11) என்ற மகனும், நிரஞ்சனா(5) என்ற மகளும் உள்ளனர். விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து காரில் பயணித்து வந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW