திருச்சி பஞ்சப்பூரில் ரூ403 கோடியில் புதிய டைடல் பார்க்- முதல்வர் அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார். அந்த வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் நடைபெறும் விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அதற்கான பணிகளை குத்துவிளக்கு ஏற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதற்கட்ட பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision