தைபூசம் திருவிழா 2ம் நாள் - பூத வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் அம்மன்

தைபூசம் திருவிழா 2ம் நாள் - பூத வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் அம்மன்

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிகழ்வில் தைப்பூச திருவிழா இரண்டாம் நாளான இன்று 12 கிராமத்து மண்டகப்படியில் அம்மன் பூத வாகனத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் தீபாராதனை காட்டப்பட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மன் வீதி உலா சென்று கோவிலில் உள்ள ஆசான மண்டபம் சென்றடைந்தார்.

தை மாதம் 16 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தை தெப்ப தேரோட்டம் திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.  இந்த திருவிழாவில், முதல் 8 நாட்கள் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் என அனுதினமும் உற்சவ அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

இதனைத்தொடர்ந்து 9ஆம் நாளான வருகிற 24ம் தேதி அம்மன் தெப்ப உற்சவம், 10ஆம் நாள் அம்மன் கண்ணாடி பல்லக்கில் வழிநடை உபயம் கண்டருளி ஸ்ரீரங்கம் வடகரை கொள்ளிடம் ஆற்றில் சென்றடைகின்றன. அன்று மாலை தீர்த்தவாரி கண்டருளும் அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தைப்பூச திருவிழாவின் இறுதி நாளான 11ஆம் நாள் உற்சவ அம்மன் கொள்ளிடம் ஆற்றில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயம் மற்றும் மண்டகப்படி பூஜைகளை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.  இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision