ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்துவதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது
அதில் கலந்து கொள்ளும் காளைகள் அனைத்து விபரங்களும் வலைதளம் மூலம் பதிவுகள் (Online Token Registration) மேற்கொண்டு வில்லைகள் பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
எனவே, பிப்ரவரி 2025 முதல் நடைபெறவுள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காளைகள் விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளபடி காளை உரிமையாளர்கள் அவர்களது ஆதார் அட்டை நகல் மற்றும்
காளைகளுக்கான மருத்துவ தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் www.tiruchirappalli.nic.in என்ற வலைதளம் மூலம் பதிவுகள் (Online Token Registration) மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision