வாடகை குழந்தைகளை வைத்து திருச்சியில் பிச்சை எடுக்கும் கும்பல் - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைகள் நலக்குழுமம், சைல்டு லைன், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உள்ளன.
இதன்மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்குறிப்பிட்ட அமைப்புகளும் கண்டு கொள்வதாக இல்லை.
திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து வருகின்றனர். 70-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா மண்டபத்திற்கு வரும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
அதேநேரம் பெற்ற குழந்தைகளை பிச்சை எடுக்க 500 ரூபாய்க்கு வாடகைக்கு குழந்தைகளை பெற்று வந்து அம்மா மண்டபத்தில் பிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் இது தெரிந்தும் மாவட்ட நிர்வாகமோ, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை அதேநேரம் சைல்ட் லைன் அமைப்புக்கு புகார் தெரிவித்தும் எங்களுக்கு புகார் வந்துள்ளது பொருள்கள் நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சைல்ட் லைன் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சைல்ட் லைன் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது போன்ற நபர்கள் மற்றும் குழந்தைகளை வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision