போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா,திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்க காவல் துணைஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

அதன்படி நேற்று(01.08.2023)-ந்தேதி, பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே "போதைபொருள்களின் தீமைகள் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி" நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பரதநாட்டியத்துடன் துவங்கி, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து நாடகம் மற்றும் மாணவர்களால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, கவிதைப்போட்டி, பாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், மாணவ செல்வங்கள் அனைவரும் மாவீரன் நெப்போலியன் போல் மிக தைரியமாக இருக்க வேண்டும் எனவும், வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும் எனவும், மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களுக்கு அடிமையாக வேண்டுமே தவிர போதை போன்ற விஷயங்களுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது எனவும், மாணவர்கள் பற்றிய கவலை எப்பொழுதும் பெற்றோர்களுக்கு இருக்கும் எனவும், மாணவர்களுக்கு ஏற்ப்படும் எந்த கவலைகளுக்கும் போதை பொருள்களை கையில் எடுக்ககூடாது எனவும், போதை இல்லா சிறப்பான நல்ல சமுதாயம் உருவாக இளைய சமுதாயத்தினரின் பங்கு அவசியம் என உரையாற்றினார்கள் .மேலும் திருச்சி அண்ணல் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மாவட்ட மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு. பேசுகையில், போதை பொருள்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு கூறியும், மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள். பின்னர் ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனை அறுவை கிசிக்சை நிபுணர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் போதை பொருள்கள் பயன்படுத்துவதினால் உண்டாகும் புற்றுநோய்கள் குறித்து பேசினார்கள். இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு சரகம், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1200 பேர் கலந்து கொண்டார்கள். கஞ்சா மற்றும் இதர போதை பொருட்களை ஒழிப்பதற்கான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் 96262-73399 என்ற எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100-க்கும், தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்கள்.

திருச்சி மாநகரில் இதுபோன்று "போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்” தொடர்ந்து நடைபெறும் எனவும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கடுமையாக எச்சரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn