திருச்சி புத்தகத் திருவிழாவிற்கு சின்னம் உருவாக்க மாணவர்களுக்கு போட்டி - ஆட்சியர் பேட்டி
திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை திருச்சி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆர்.சி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது ஜங்ஷன் ரவுண்டானா வழியாக மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் செல்போன்களை பயன்படுத்த மாட்டோம், வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்போம் என்ற பதாகைகள் உடன் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்... குழந்தைகளிடம் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக இந்த புத்தகத்தில் உள்ள கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த புத்தக திருவிழாவிற்கான பிரத்யேக சின்னத்தை மாணவர்கள் உருவாக்கிட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கைவணணத்தில் உருவாகும் சிறந்த சின்னம் இந்த புத்தக திருவிழாவின் (லோகோ) சின்னமாக தேர்ந்தெடுக்கபட்டு அந்த சின்னமும் இதில் இடம்பெறும். இதன் முதல் சிறப்பம்சமாக சின்னம் (MASCOT) வெளியிடும்
வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டு சிறந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஏற்படுத்தி அதில் கிடைக்கும் சிறந்த சின்னத்தை உருவாக்கி திருச்சிராப்பள்ளி புத்தகக் கண்காட்சி சின்னமாக வடிவமைக்கப்படவுள்ளது. மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கான நோக்கத்தில்தான் உங்களிடமிருந்து அந்த சின்னம் பெறப்பட்டு அதனை மேலும் மெருகேற்றி புத்தக திருவிழா சின்னமாக பயன்படுத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9487091122, 9894548445) உங்கள் கற்பனைக்கெட்டிய சின்னத்தை வரைந்து அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சின்னத்தை வரைந்து அனுப்பும் நபரை புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision