கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் அரிப்பு - பலப்படுத்தும் பணி தீவிரம்

கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் அரிப்பு - பலப்படுத்தும் பணி தீவிரம்

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிக நீர்வரத்து வந்துக்கொண்டிருப்பதால் கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டவாறு வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

இந்நிலையில் திருச்சி வாத்தலை நம்பர் 2 கரியமாணிக்கம் அருகே கொள்ளிடம் ஆற்றிற்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையே உள்ள மண் கரையானது கொள்ளிடத்தில் செல்லும் வெள்ள நீரின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்து கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தபின் உடனடியாக கொள்ளிட கரையில் ஏற்படும் மண் அறிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் டிப்பர் லாரிகள் மூலம் பரான்கற்களை கொண்டுவரப்பட்டு மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் கொட்டப்பட்டு கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO