தமிழ்நாட்டில் சிலரை விடுதலை செய்ய முடியாது - திருச்சியில் அமைச்சர் பேட்டி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை காவலர் பயிற்சிப்பள்ளியில் 114 ஆண் சிறைக் காவலர்கள், மற்றும் 18 பெண் சிறைக் காவலர்கள் என மொத்தம் 132 சிறைக் காவலர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்பட்டது. கவாத்து, துப்பாக்கி சுடுதல், அணிநடை, சட்டப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி என பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சிறைக் காவலர்களின் பயிற்சிகள் நிறைவடைந்து. திருச்சி மத்திய சிறைச்சாலை கவாத்து திடலில் நடைபெற்ற சிறைக் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் தமிழக சட்டமன்றம் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் காவல்துறை இயக்குநரும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள்துறை தலைமை இயக்குநருமான சுனில்குமார் சிங் பங்கேற்று பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையிணை ஏற்றுக்கொண்டு, பயிற்சியின்போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய..... சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில்குமார் சிங் பேசுகையில்...இந்தியாவிலேயே தமிழக சிறைத்துறை முன்மாதிரியாக விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பயிற்சியேற்ற சிறை காவலர்கள் அனைவரும் நீங்கள்தான் இந்த துறையின் தூண்கள் என்பதை உணர்ந்து சிறைவாசிகளை சீர்திருத்தி, நல்ல சமுதாயத்தை உருவாக்கிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி..... சிறை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக முதல் கட்டமாக 600 பேரை தேர்வு செய்துள்ளோம். அவர்கள் குறித்து தனித்தனியாக கோப்புகள் அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதில் 100பேர் வரை விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்களும் ஆளுநர் கையொப்பமிட்டு படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்.
ஆதிநாதன் ஆணையம் இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் தவிர மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதில் குறிப்பிட்ட தீர்வு நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும். (இதன் மூலம் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் சிக்கல் உள்ளதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்). சிறப்பு முகாமில் உள்ளவர்கள் பெயில் பெற்றாலும், அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது.
இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்கும். நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நோக்கம். அதற்காக நாம் நீட்டிலிருந்து விலக்கு கேட்டு அனுப்பிய கோப்புகளுக்கு ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சில கேள்விகளை கேட்டிருந்தது. அதற்கான விளக்கங்களை மக்கள் நல்வாழ்வு துறையும், சட்டத்துறையும் சேர்ந்து அனுப்பி உள்ளோம். சிறையில் அலைபேசி வைத்து கொள்ள கூடாது என்பது தான் விதி இருந்த போதும் சிலர் வைத்துள்ளார்கள். அதை அவ்வப்போது பறிமுதல் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO