எட்டரை கிராம அஞ்சலகம் துணை அஞ்சலகமாக தரம் உயர்வு

எட்டரை கிராம அஞ்சலகம் துணை அஞ்சலகமாக தரம் உயர்வு

திருச்சி எட்டரை கிராமத்தில் புதிய துணை அஞ்சல் அலுவலகத்தை தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். ஏற்கனவே இக்கிராமம் கிளை அஞ்சலகமாக இருந்து அதிக வரவு செலவுகள் காரணமாக துணை அஞ்சலகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த துணை அஞ்சலகத்தில் சேமிப்பு வங்கி, செல்வமகள் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, பொது நல சேமிப்பு கணக்கு ஆகிய சிறு சேமிப்பு திட்டங்களையும் ஆயுள் காப்பீட்டுத்திட்டங்கள் முதலிய சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தியாவில் கணிணி மயமாக்கப்பட்ட எந்த துணை அஞ்சலகங்களிலும் வரவு செலவு செய்யலாம். பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் சிறப்புகளை அஞ்சல் துறை தலைவர் விரிவாக விளக்கினார்.

பொதுமக்கள் இந்த அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் சேவைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.  மேலும் அதிக வரவு செலவுகள் செய்வதன் மூலம் இந்த அலுவலகத்தின் நிலை வருங்காலத்தில் மேலும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அலுவலகத்தில் பாரம்பரிய சேவைகளான பதிவுத்தபால், பார்சல், விரைவு அஞ்சல், மிண்ணணு பணமாக்கம் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எட்டரை துணை அஞ்சலகமாக உயர்வு பெற்றதற்கு அப்பகுதி மக்கள் சார்பாக எட்டரை பஞ்சாயத்து தலைவி திவ்யா நன்றி தெரிவித்தார். விழாவில் முதல் நாளே கணக்கு துவங்கிய பொது மக்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், முதுநிலை கண்காணிப்பாளர் RMS ‘T’ கோட்டம் மைக்கேல் ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சண்முக வடிவு, உதவி இயக்குனர் வாசுதேவன், தபால் கட்டண வங்கி முதுநிலை மேலாளர் சங்கீதா, உதவி கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW