கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாளை  முன்னிட்டு மாணவர் மன்றம் தொடக்கம்

திருச்சி தெற்கு மாவட்ட கழக மீனவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் மற்றும் மேலாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சாந்தகுமாரி சாலமோன் மற்றும் மாநகர அமைப்பாளர் பாவா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை சிறப்புரையாற்றினார்.

மாநில கழக மீனவர் அணி செயலாளர் ஏ.ஜோசப் டான்லின், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன் லீலாவேலு குணசேகரன் ராஜேஷ்வரன் K.K.k கார்த்தி, மீனவர் அணி மாநகர தலைவர் ரத்தினவேல் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது.... 2006 - 2011ம் ஆண்டில் மீனவர்களுக்கு 88 கோடி 51 லட்சம் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியவர்கள் மறைந்த கலைஞர் மீனவர்களுக்கான சேமிப்புத் தொகை மகளிர் காண நிவாரணத் தொகை 61 கோடி 57 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. மீனவர்கள் என்பவர்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கீடு அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் 1076 கிலோமீட்டர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு அதிகம் உண்டு. நீங்கள் வேர்வை சிந்தி உழைக்கக் கூடியவர்கள் கோட் சூட் போட்டு கொண்டு இருப்பவர்கள் அல்ல. இதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தான் மீனவர் அணி உருவாக்கப்பட்டு அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன. போர் வந்தால் ராணுவ வீரர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இருக்குமோ இல்லையோ என்று சொல்ல முடியாது. மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்லும்போது அவர் குடும்பத்தார் உயிரை பிடித்துக் கொண்டு இருப்பார்கள் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று மீனவர்களுக்கு தினம் தினம் போர் தான். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு தமிழருக்கும் கடமை உண்டு என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision