திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்தவர் மின்சாரம் தாக்கி பலி

திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்தவர் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி சர்ச்சில் நடந்த திருமண விழாவில் புகைப்படம் எடுத்தவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வம்பன் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் இவரது மகன் சுரேஷ் கண்ணன் (30) இவர் போட்டோகிராபர் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று சுரேஷ் கண்ணன் தனது தம்பி உறவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் சீனிவாச நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் வரதராஜன் (21)என்பவருடன் திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி சர்ச்சில் நடந்த திருமண விழாவிற்கு வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதற்கு வந்துள்ளார்.

அப்படி வந்தவர் திருமணத்தை புகைப்படம் எடுத்தப்போது அருகில் இருந்த ஸ்டாண்டிங் டேபிள் ஃபேனை சுரேஷ் கண்ணன் பிடித்துள்ளார் அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுரேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது சுரேஷ் கண்ணனுக்கு திருமணமாகி 7 மாதங்கள் தான் ஆகிறது என்றும் அவரது மனைவி படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision