திருச்சியில் துணிப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி

திருச்சியில் துணிப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மனிதசங்கிலி

தண்ணீர் அமைப்பு, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பாக காவிரியைக் காப்போம்! துணிப்பை எடுப்போம்!! என்ற வாசகங்களுடன் மாணவ, மாணவிகள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். தண்ணீர் அமைப்பு மற்றும் M.A.M. மேலாண்மை கல்லூரி சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் ஒருங்கிணைந்து திருச்சி காவிரி பாலத்தில் கைகளில் துணிப்பையை ஏந்தியவாறு விழிப்புணர்வு சங்கிலி நிகழ்வினை நடத்தினர்.

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மஞ்சப்பை பயன்பாட்டை தொடங்கி வைக்க உள்ள நிலையில், முன்னதாக திருச்சி விமான நிலைய இயக்குநர்
தர்மராஜ் தொடங்கி வைத்தார்,

திருச்சியில் பிளாஸ்டிக் பையை தவிர்த்து காவிரி தாயை காக்க துணிப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி. நீலமேகம். செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், M.A.M B School, மேலாண்மைக் கல்லூரி செயலாளர் பாத்திமா பஹுல், இயக்குனர் எம்.ஹேமலதா, முதல்வர் சூசன் கிறிஸ்மா

திருச்சி விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், எம்.ஏ.எம்,பி ஸ்கூல் மேலாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், விமான நிலைய ஆணையக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn