திருச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் யோகக் கலையை உலகம் முழுவதும் பிரபலப் படுத்தியதுடன், உலக நாடுகள் ஒருமித்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலக நாடுகள் முழுவதும் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சூழலில், 8வது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
யோகா குரு ராஜசேகரன் தலைமையில் உடலுக்கும், உள்ளத்திற்கும், சப்த நாடிகளுக்கும் பலன் தரும் வகையில் பல்வேறு ஆசனங்களை சொல்லிக் கொடுக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆசனங்கள் மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்து மகிழ்ந்தனர். முன்னதாக யோகாசன பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகாசன நடன நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.
இதேபோன்று திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது மேலும் பிரதமர் மோடி பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO