கிராமப்புற மாணவர்களுக்கு NATA தேர்விற்கு இலவச பயிற்சி

கிராமப்புற மாணவர்களுக்கு NATA தேர்விற்கு இலவச பயிற்சி

தமிழகத்தில் கட்டிடக்கலையை பயில்வதற்கான இளங்கலை கட்டிடக்கலை பி.ஆர்க் (B.Arch) NATA என்னும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கி உள்ளது. National Aptitude Test in Architecture 
அறிவாற்றல் திறன்கள், காட்சி பார்வை மற்றும் அழகியல் உணர்திறன் சோதனைகள், தர்க்க ரீதியான பகுத்தறிவு மற்றும் விமர்சன சிந்தனை திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஆய்வுத் துறைக்கு, அதாவது கட்டிடக்கலைக்கான விண்ணப்பதாரரின் திறனை நேட்டா அளவிடுகிறது. 

கடந்த காலங்களில் வேட்பாளர் பெற்ற கற்றல் தவிர சில ஆண்டுகள் மற்றும் குறிப்பிட்ட ஆய்வுத் துறையுடன் தொடர்புடையது. இத்தேர்விற்கான இலவச பயிற்சியை சென்னையினை சேர்ந்த தனியார் கட்டிடகலை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சரத்குமார் முன்னெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்.. கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு எல்லாம் கட்டிடக்கலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. அது மட்டுமின்றி அவர்களுக்கு கட்டிடக்கலை கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காக NATA  இத்தேர்வில் வெற்றி பெறுவது வழிகாட்டு முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

வருடம் தோறும் அருகில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தோம். இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் இது சென்று சேர வேண்டும் என்பதற்காக இலவசமாக இந்த பயிற்சியை தொடங்க உள்ளோம் என்றார்.

ஜூலை மாதம் இத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்விற்கு எவ்வாறு தயார் ஆக வேண்டும் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு வகுப்பாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். இந்த பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் .

கொரானா காலம் என்பதால் மிக தாமதமாக வகுப்பு இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இனிவரும் ஆண்டுகளில் மாணவர்களுக்கு முழுமையான தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக முயற்சியை தொடங்கியுள்ளோம் என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC