திருச்சியில் 49 நாட்களுக்குப் பின் பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது

திருச்சியில் 49 நாட்களுக்குப் பின் பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கும்பகோணம் லிமிட் திருச்சி மண்டலத்தில் உள்ள அரசு பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி 735 பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 399 நகர பேருந்துகள் 50 சதவீத அளவிற்கு மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகை எதிர்பார்ப்பை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற தனியார் பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பேருந்து நடத்துனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று குறையாத தளர்வுகள் அளிக்காத தஞ்சாவூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC