சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் - திருச்சியில் கிராமப்புற பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் - திருச்சியில் கிராமப்புற பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் இன்று சர்வதேச கிராமபுற பெண்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் திருச்சி ஒலையூர் உள்ள கிராம பெண்களை சந்தித்து இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசியர்  கி. சதிஸ்குமார் கிராமப்புற பெண்களை சந்தித்து பேசினார். 

Advertisement

அவர் பேசுகையில்... "வீட்டு வேலைகளை மட்டுமல்லாமல் விவசாயம், மீன் பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட தொழில்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிராமப்புற பெண்கள் செய்கின்றனர். இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு, கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மறுக்க முடியாது. இவர்களை அங்கீகரிக்கும் விதத்தில் 2008ம் ஆண்டு முதல் ஐ.நா., சார்பில் அக்டோம்பர் 15ம் தேதி சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'பருவநிலையை பாதுகாப்பதில் கிராமப்புற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பங்கு' என்பது இந்தாண்டு மையக்கருத்தாக உள்ளது.

சுகாதாரம், போக்குவரத்து வசதிகளில் நகர்புறத்தைக் காட்டிலும் கிராமங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. குடிக்க நீரின்றி பல மைல்கள் நாள்தோறும் கால்கடுக்க நடந்து நீர் இறைத்துவரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவின் கிராமங்களில் அதிகரித்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் எதிரொலிக்கும் பருவநிலை மாற்றத்தையும், புவி வெப்பமடைவதையும் கட்டுப்படுத்துவதற்கு கிராமப்புறங்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதல் கட்டமாக உலகம் முழுவதும் வறுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பெண்களின் நிலையை மாற்ற வேண்டும்
என்று பேசினார். 


கிராமப்புற பெண்களை அவர்கள் வேலை செய்து இடத்துக்கு சென்று பேசியது மட்டும் இல்லாமல் அவர்கள் ஓய்வு எடுக்கும் இடத்துக்கு  சென்று இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மக்கள் சக்தி இயக்க நண்பர்கள் சந்திரசேகர், ஆர்.இளங்கோ, வாசு, மணிமாறன், விவேகானந்தன், லலிதா, தனலெட்சுமி , மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .