B.Voc (ICT) துறையும், Svasti மென்பொருள் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

B.Voc (ICT) துறையும், Svasti மென்பொருள் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசியக்கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் B.Voc (ICT) துறையும், திருச்சி Svasti மென்பொருள் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. விழாவினை தேசியக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.K. குமார் தலைமை ஏற்றார்.

B.Voc (ICT) துறைத் தலைவர் N. பார்த்தசாரதி ஒருங்கிணைப்பில், மாணவர் ஐயப்பன் வரவேற்புரை வழங்க விழா இனிதே ஆரம்பமானது. நிகழ்ச்சியில் Svasti மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி A. கேசவன் மற்றும் நித்தீஷ்வரன் கலந்து கொண்டு, வளர்ந்து வரும் மென்பொருள் தொழில்நுட்பம் பற்றியும், அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் முதல்வர் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் அப்துல் சமீர் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision