பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கரட்டாம்பட்டி ஊராட்சியில் திருச்சி - துறையூர் மாநில புறவழிச் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவில்லை.

இது சம்பந்தமாக பொதுமக்கள் முன்னாள் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அவர்களிடம் 2017 ஆம் ஆண்டு கரட்டாம்பட்டி ஊராட்சியில் ஆய்வு செய்கின்ற தருவாயில் பொது கழிப்பிடத்தை பற்றி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிபடையில் நடவடிக்கை எடுப்பதற்கு முசிறி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கரட்டாம்பட்டி ஊராட்சி மூலம் உடனடியாக இந்த பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரைக்கும் பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவில்லை. மீண்டும் பொதுமக்கள் இது சம்பந்தமாக ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் ஊராட்சி தலைவரிடமும், கிராம சபை கூட்டத்திற்கு வருகை புரிந்த அரசு அலுவலர்களிடமும் வலியுறுத்தியும் பயன் இல்லை.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision