பலி வாங்கக் காத்திருக்கும் பாலம் - அலட்சியம் காட்டும் மாநகராட்சி - பரிதவிப்பில் திருச்சி மாநகர வாசிகள்

பலி வாங்கக் காத்திருக்கும் பாலம் - அலட்சியம் காட்டும் மாநகராட்சி - பரிதவிப்பில் திருச்சி மாநகர வாசிகள்

ஆழ்வார்த்தோப்புக்கும், பீமநகருக்கும் இடையே உய்யகொண்டான் ஆற்றின் மீதுள்ள இணைப்புப் பாலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் பக்கச் சுவர்கள் இடிந்து பாலம் வலுவிழந்து அபாயகரமான நிலையில் உள்ளது.

காலையிலும், மாலையிலும் பள்ளி, அலுவலக நேரங்களில் இந்தப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், பக்கச்சுவர் இல்லாததால் குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் நிலைதடுமாறி உய்யகொண்டானில் விழுந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தென்னூர், கண்டோன்மெண்ட், அண்ணாநகர், பீமநகர் பகுதிவாசிகளின் முக்கியப் பிரச்னையான இந்தப் பாலம் குறித்து மாநகராட்சியிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகாரளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உயிர்ச்சேதம் போன்ற பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இப்பாலத்தைச் சீரமைக்கவும், புதிய பாலமொன்றைக் கட்டவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இப்பாலத்தைச் சீரமைப்பது தொடர்பாக மாநகராட்சி தரப்பு விளக்கத்தைக் கேட்க திருச்சி விஷன் தொடர்ந்து முயன்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision