ரவுண்டானாவில் காவலர்கள் இல்லாமல் போக்குவரத்து பாதிப்பு - பள்ளி கல்லூரி பணிக்கு செல்வார்கள் அவதி
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா என்பது சேலம், சென்னை, அரியலூர், ஆத்தூரிலிருந்து திருச்சி மாநகருக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நம்பர் 1 டோல்கேட் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் இன்று போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசார் இல்லாததால் காலை முதல் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தில் சிக்கி சிரமத்திற்கு ஆளாகினர். மாநகருக்குள் செல்லும் முக்கியமான இணைப்பு சாலையில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இல்லாததாலும் கனரக வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்வதால் காலை 8 மணி முதல் 10 வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பணிக்கு செல்வார்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்வார்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பது பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்பவர்கள் மட்டுமல்லாத சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision