திருச்சி மாநகரில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

திருச்சி மாநகரில் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

திருச்சி பொன்மலை ரயில்வே சங்கத்திடல் பகுதியில் பல மாதங்களாக சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது.

மேலும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் கடை வீதியிற்கும் செல்லும் வழி, அருகில் கோவில்களும் உள்ளது. சங்கத்திடல் சுற்றி முள்புதர் மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்கி உள்ளது. மழை நேரங்களில் இந்த கழிவுநீர் சாலைகளிலும் வழிந்தோடுகிறது. தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

உடனடியாக ரயில்வே மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்குமாறு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision