அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகு திக்குட்பட்ட அரசங்குடியில் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து கீழே விழுந்தது. அப்போதைய எம்பி குமார் முயற்சியில் 2021ல் நேஷனல் ஹெல்த் மிஷன் திட்டத்தில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள அரசங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கி வந்தது.

இங்கு போதிய இடவ சதியின்றி டாக்டர்களும், நிலைய அலுவலர்களும், ஊழியர்களும் தவித்து வருகின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணிகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்நாட்களில் அரசங்குடியை சுற்றியுள்ள நடராஜபுரம், கூத்தப்பார், வேங்கூர், தோகூர், முருக்கூர், புத்தாவரம், ஒட்டக்குடி, முல்லைக்குடி, கிளியூர் செட்டியார்ப்பேட்டை, பத்தாளப்பேட்டை கிராமங்களிலிருந்து கர்ப்பிணிகள் இங்கு வருவர்.

இவர்கள் காத்திருப்பதற்கு கூட இடவசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசங்குடியில் புதிதாக அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சரின் தேதிக்காக காலம் தாழ்த்தாமல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொறு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வருகை தந்து அவரது கையால் திறப்பதற்காக காத்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காலம் தாழ்த்தாமல் அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ முன் நின்று உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை தினத்தன்று பெண் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும், மருத்துவ பரிசோதனைக்காக ஸ்கேனிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜ், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision