ரூபாய் 161.30 கோடி மதிப்பில் பல்வகை கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

ரூபாய் 161.30 கோடி மதிப்பில் பல்வகை கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி கலையரங்கில், இன்று (26.10.2021) நடைபெற்ற “வங்கி 
வாடிக்கையாளர்களை நோக்கிய தொடர்பு முகாமினை” மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொடங்கி வைத்து அனைத்து வங்கிகளின் வாயிலாக 1941 
பயனாளிகளுக்கு விவசாயக் கடன், சுய உதவிக்குழு கடன், குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், கல்விக் கடன், வாகன வசதிக் கடன், தனிப்பட்ட நுகர்வோர் கடன் உள்ளிட்ட ரூபாய் 161.30 கோடி மதிப்பில் பல்வகை கடனுதவிகளை வழங்கினார். இம்முகாமில் 30 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அனைத்து வங்கி சேவை விவரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையமும் கண்காட்சியில் இடம் பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் இவ்விழாவை துவக்கி வைத்து உரையாற்றுகையில் "இந்த முகாம் மக்களுக்கு விழிப்புணர்வும், சேவை பற்றிய விவரங்களும் தெரியப்படுத்த அனைத்து வங்கிகளும் ஒன்று சேர்ந்து செயல்படுவது, மக்களுக்கு சிறந்த பயனைத் தரும் சுயஉதவிக்குழுக்களும், மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ திட்டங்களுக்கும் அதித அளவில் கடன் வழங்கி மக்களின் வாழ்வாதாரம் தொழில் மேம்பாடு பெற வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் திரு.கே. வேலாயுதம் வரைவேற்புரை வழங்கினார் திருச்சி மாவட்டம் சுய உதவிக்குழு கடன் வழங்கியதில் நிதியாண்டு மட்டுமல்ல கடந்த ஐந்து ஆண்டுகளாக சுய உதவிக்குழு கடன் இலக்கை அடைந்து, மாவட்ட முன்னோடி வங்கிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறார் மேலம் சிறு, குறு நடுத்தர கடன்கள் வழங்கியதில் 2019-ல் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அளவில் 
முதலிடம் வகித்தது, சென்ற நிதியாண்டு திருச்சி மாவட்டத்தில் ரூ.17,200 கோடி கடன் வழங்கி 150 சதவீதம் இலக்கினை பெற்றது குறிப்பிடதக்கது என்றார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் லட்சுமி வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் திருச்சி மாவட்ட வங்கிகள் அனைத்து செயல்பாடுகளிலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுவும் சுய உதவிக்குழு கடன், தொழில் முனைவோர் கடன், விவசாயக் கடன் ஆகிய முன்னுரிமை கடன்களை, பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில், இலக்கினை 150 சதவீதம் அடைந்து இருக்கிறது. வங்கிகள் இணைந்து ஒன்று கூடி முகாம் நடத்தியதால் வங்கி சேவைகள் பண 
பரிமாற்றம், வங்கிக் கடன் விவரங்கள் குறித்து பொதுமக்கள் வெகுவாக விவரங்களை தெரிந்து பயன் பெற்றனர். கோவிட் - 19 தடுப்புசி மையம் மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பின்னர், வங்கியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் அமித்வெர்மா, இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஆர்.ராஜேந்திரன், கனரா வங்கி துணை பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உரையாற்றினர் மற்றும் திட்ட இயக்குனர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், தாட்கோ மேலாளர், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn