ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வை நோக்கிய முன்னேற்றம் - எஸ்ஆர்எம் மருத்துவமனையின் விழிப்புணர்வு ஓட்டம்!!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது, உலக இதய தினம் இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதய ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும் நோக்கமாக உள்ளது.
அதேபோல அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் அக்டோபர் என்று கொண்டாடப்படும் மார்பக புற்றுநோய் என்ற இந்த பிரச்சாரம், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. புற்றுநோயின் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
இதனடிப்படையில் உலக இதய தினம் மற்றும் பிங்க் அக்டோபர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வு இருதய ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுகாக திருச்சி எஸ்ஆர்எம் வளாக மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பங்கேற்புடன் நான்காவது எஸ்ஆர்எம் ஓட்டம் 2024 நேற்று நடைபெற்றது.
இந்த ஓட்டமானது ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் உட்பட பல நிலைகளில் அனைத்து வயதினரும் பங்கேற்க்கும் வகையில் நடைபெற்றது. இதய ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் தலைவர் மருத்துவர் ஆர். சிவக்குமார்,
இணை தலைவர் எஸ். நிரஞ்சன், தலைமை இயக்குநர் மருத்துவர் என்.சேதுராமன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் துணை இயக்குநரும், மருத்துவருமான பாலசுப்ரமணியம் அனைத்து பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். கூடவே எஸ்ஆர்எம் ஓட்டம் என்பது ஓட்ட பந்தயத்தை விட முக்கியமானது.
இது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் விழிப்புணர்வை நோக்கிய முக்கியமான இயக்கம். நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்விலிருந்து திரட்டப்படும் நிதியானது இதய நோய் ஆராய்ச்சி மற்றும் மார்பக புற்றுநோய் ஆதரவில் கவனம் செலுத்தும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision