திருச்சி மாநகரில் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 12 கிலோ சிக்கன் பறிமுதல்

திருச்சி மாநகரில் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 12 கிலோ சிக்கன் பறிமுதல்

திருச்சி தில்லைநகர், வயலூர் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் 21 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி சுமார் கிலோ 12 வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், ஐந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது.

ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வசந்தன், ஸ்டாலின், பாண்டி, பொன்ராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO