பாதுகாப்பற்ற நிலையில் பயணிகள் செல்லும் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்...

பாதுகாப்பற்ற நிலையில் பயணிகள் செல்லும் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்...

நாடாளுமன்றத் தேர்தல் (19ஆம் தேதி) நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 296 வாக்கு சாவடி மய்யங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 20 வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக 19ஆம் தேதியான நாளை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கான உபகரணங்கள் ஆகியவை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 32,614 , பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 38,960, மூன்றாம் பாலினத்தவர் 61 என மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் 296 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கின்றனர் அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருள்கள் அடங்கி தொகுப்புடன் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்காக பயணிகள் செல்லும் வேன்களில் 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த வாக்கு சாவடி மையங்களில் ஒரு வாக்குச்சாவடியில் நான்கு முதல் ஐந்து பேர் என மொத்தம் சுமார் 1400 மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவார்கள். மேலும்வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதற்கு மாற்று வாக்கு பதிவு இயந்திரங்கள் தாலுக்கா அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் வேலை பார்க்கும் அலுவலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலாமல் போனாலும் அல்லது உடல்நிலை ஏதேனும் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு மாற்றாக செயல்பட கூடியதற்கு தேவையான ஊழியர்களும் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள், மினி லாரிகளில் பாதுகாப்பான முறையில் வாக்குபதிவு இயந்திரங்களை வாக்கு சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் பயணிகள் ஏற்றி செல்லும் வேன்களில் குறிப்பிட்ட சீட்டுகளை கழற்றி விட்டு திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்கள் ஏற்றி செல்லப்படுகிறது. இது பாதுகாப்பற்ற முறையில் ஏற்றப்பட்டு கொண்டு செல்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision