திருச்சியில் 3321 புகார் மனுக்களின் மீது தீர்வு - மாநகர காவல் ஆணையர் தகவல்
தமிழக காவல்துறை இயக்குநர், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் பெட்டிசன் மேளா நடத்திட உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாநகர காவல் ஆணையர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களின் தீர்வு கண்டறியும் வகையில் இன்று (22.11.2023)-ந் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா காவல் ஆணையர் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த பெட்டிசன் மேளாவில் 35 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், கடந்த 11 மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில், முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 1738 மனுக்களில், 1668 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த 2061 மனுக்களில் 1661 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள்மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இம்முகாமில், காவல் துணை ஆணையர்கள், காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் பெறப்பட்ட "முதல்வரின் முகவரி" மனுக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision