பழைய கரூர் சாலையில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்ட அனுமதி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய கரூர் சாலையில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே ரூ. 3.5 கோ டியில் புதிய பாலம் கட்ட நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.
இதனால் அண்ணா சிலை பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக் குத் தீர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
திருச்சியின் முக்கியப் பகுதியாக விளங்கும் சத்திரம் பேருந்து நிலை யத்தில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும்.
குறிப்பாக, சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றியும், அண்ணா சிலை ரவுண்டானாவிலும் போக்கு வரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.
இதைத் தவிர்க்க அண்ணா சிலை ரவுண்டானாவின் அளவை குறைத்து, ஆங்காங்கே தடுப்புகளை அமைத்தபோதிலும் போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் முழுமையாகத் தடுக்க முடிய வில்லை.
அண்ணா சிலைக்கு பக்கத்தில் பழைய கரூர் சாலையில் உள்ள மேலசிந்தாமணி வழியாக குடமுருட்டி பாலத்துக்கு பழையபடிபோக்குவரத்தை இயக்கமுடிந்தால், போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு குறைக்க முடியும் என போக்குவரத்து போலீஸாரும், சாலை பாதுகாப்புக் குழுவினரும் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், மேலசிந் தாமணி பகுதியிலுள்ள கோட்டை வாய்க்கால் பாலம் மிகக் குறுகலாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது.
பேருந்து, லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களை சுலபமாக இயக்க முடியாத சுமார் 60 ஆண்டுகள் பழை மையான அகலம் குறைவான, பழு தடைந்த கோட்டை வாய்க்கால் பாலத்தை அகலமாக்கி, புதிதாகக் கட்டித் தர வேண்டும் என இப்பகுதிமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கோட்டை வாய்க்கால் பாலத்தை புதிதாக அகலமாக ரூ. 3.5 கோடிக்கு கட்டித் தர நிர்வாக அனுமதி கிடைத் துள்ளது.
திருச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பழைய கரூர் சாலை என்றழைக்கப்படும் நாகை கூடலூர் - மைசூர் சாலை கி.மீட்டர் 140 / 10 இல் சத்திரம்பகுதியில் சிதம்பர மஹால் அருகில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே தற்போது உள்ள குறுகிய பாலத் துக்கு (தற்போதைய பாலத்தின் அகலம் 3.9 மீட்டர் நீளம் 23 மாற்றாக 10 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் உடைய புதிய பாலத்தை ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டப்பட்டு அரசுக்கு கருத்துருஅனுப்பப்பட்டது.
இதன்பேரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டம் 2025-26-இல் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.மேலும் இந்தப் பாலத்துக்கு கீழ் உள்ள தண்ணீரை நிறுத்தும் ஷட்டர்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளது என்றனர்.
கோட்டை வாய்க்கால் பாலத்தின் அடிமானங் களின் வடிவமைப்பு பணிகளும், மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறவும் தற்போது பணி கள் நடைபெறுகின்றன.
உரிய தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரப் பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.