திருச்சி சாரதாஸ் நிறுவனர் மணவாளர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - ஏப்ரல் 26 இல் ஆவணப்படம் வெளியீடு

திருச்சி சாரதாஸ் நிறுவனர் மணவாளர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - ஏப்ரல் 26 இல் ஆவணப்படம் வெளியீடு

திருச்சி சாரதாஸ் நிறுவனர் மணவாளன் முதலாமாண்டு நினைவேந்தல்வாடிக்கையாளர்கள் முன்னிலையில் பிரமாண்ட உருவப்படம் திறப்பு26ம்தேதி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஆவணப்படம் வெளியீடு

திருச்சி என்றாலே, மலைக்கோட்டையும், அதன் அருகிலுள்ள சாரதாஸ் ஜவுளிக்கடையும் நம் மக்களின் நினைவுகளுக்கு வரத் தவறுவதில்லை. அந்த அளவிற்கு திருச்சி மற்றும் சுற்றியுள்ள மத்திய மண்டல மாவட்ட மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்து அவர்களின் நெஞ்சங்களுக்குள் நெருக்கமாகியுள்ளது திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனம். இத்தகைய பெருமைக்குரிய ஜவுளி நிறுவனத்தை எளிமையாக தொடங்கி, தனது கடின உழைப்பாலும், நேர்மையான வணிகத்தாலும், மனிதநேயமிக்க பண்பாலும் ‘திருச்சி சாரதாஸ்’ என்ற பெரும் ஜவுளி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்டியவர் சாரதாஸ் நிறுவனர் அமரர் தே.மணவாளன் பிள்ளை அவர்கள்.

அரைநுாற்றாண்டு காலம் வணிகத்தோடு மட்டுமின்றி, மக்களிடம் இருந்த பெற்ற பணத்தை ஆன்மிகம், மனிதநேயம், இயற்கையின் ஈர்ப்பு, சமூகக் கடமை, பொதுமக்களின் மீதான பொறுப்புணர்வு என ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு திருப்பிச்செலுத்திக் கொண்டே இருந்த பெரியவர் தே.மணவாளன் பிள்ளை அவர்கள், காலத்தின் கட்டளையாக கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 30ம்தேதி நம்மைவிட்டு விண்ணுலகம் சென்றார். அவர்கள் எந்த உலகிற்கு சென்றாலும், அவர் ஆத்மாவும், நினைவும் இந்த சாரதாஸ் என்ற ஜவுளி உலகத்தையே ஆசிர்வதித்து வருகிறது என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை.

அத்தகைய சிறப்புக்குரிய, பெரியவர் மணவாளன் பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் வரும் 30ம்தேதி அனுஷ்டிக்கப்பட உள்ளது. அதன், முதல் நிகழ்வாக, அவரது நட்சத்திரப்படியான நினைவு நாளான  (20ம்தேதி) சாரதாஸ் நிறுவனத்தில் அவரது உருவப்படம் திறப்பு விழா நடந்துள்ளது.

 இதுகுறித்து சாரதாஸ் இயக்குனர்கள் ரோஷன் மணவாளன், சரத் மணவாளன் ஆகியோர் கூறியதாவது:

எங்கள் தந்தை, சாரதாஸ் நிறுவனர் ஐயா, பெரியவர் மணவாளன் பிள்ளை அவர்கள், தனது உலகமாக எண்ணி சுற்றி சுற்றி வந்து, வளர்தெடுத்த சாரதாஸ் நிறுவனத்தின் மையப்பகுதியின் மேல்பகுதியில், அவரது பிரமாண்ட உருவப்படம் இன்று திறக்கப்பட்டுள்ளது. அவரின் சாம்ராஜ்ய கோட்டையான சாரதாஸில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவரது உருவப்படத்தை வைக்கலாம், வணங்கலாம். ஆனால், அவர் தன் வாழ்நாள் முழுவதும் சுற்றி, சுற்றி வலம் வந்து வாடிக்கையாளர்களுடன் பேசி கலந்துரையாடி மகிழ்ந்த மைய மண்டபப்பகுதி தான் அவர் காலத்திற்கும் வீற்றிக்க உகந்த பகுதியாகும். அதோடு, வாடிக்கையாளர்கள் தரைத்தளம், முதல் தளம், 2ம் தளங்களில் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும், புன்னகை ததும்பும் அழகிய மணவாளரின் முகம் பிரகாசிக்கும் வகையில் இந்த இடத்தில் மணவாளன் உருவப்படமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்.

அதோடு, தொழிலில் என்றென்றும் புதுமை, புதுமையிலும் முதன்மை, முதன்மையிலும் முன்னோடி என்று நாள்தோறும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தேடல்களைத் தொடர்ந்த எமது நிறுவனரின், எண்ணத்தைப் போன்றே அவரது உருவப்படமும், வெறும் படமாக மட்டுமின்றி, இன்றைய நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் சாரதாஸில் உள்ள ஜவுளிகளின் எண்ணற்ற வண்ணங்களைப் போன்றே ஒளிக்கீற்றுகளையும், அவருக்கு மலர்துாவுதல், இயற்கையின் கொடையான தண்ணீரால் தழுவுதல் போன்ற புதுமையான பின்னணி வடிவமைப்புகளுடன் கூடிய டிஜிட்டல் சுவரின் இடையே அவரது முகம் காண்போருக்குள்ளும் ஊடுருவும் வகையில் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாரதாஸ் நிறுவனர் ஐயாவின் அன்பிற்குரிய விஐபிக்கள், விவிஐபிக்கள் தமிழகம் மட்டுமின்றி, உள்நாடு, வெளிநாடுகள் என பார் முழுவதும் ஏராளமானோர் உள்ளனர். அதனால், அவரது உருவப்படத்தை திறக்க அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஆயிரம் மடங்கு உரிமையும், தகுதியும் உண்டு. அதனால், ஒருவரைவிட்டு ஒருவர் திறப்பது கடினம். அதனால், அவர்கள் அனைவரது சார்பாகவும், மணவாளன் அவர்கள் தனது உயிருக்கு உயிராக நேசித்த சாரதாஸ் வாடிக்கையாளர்களின் முன்னிலையில், இந்த நிறுவனத்தை அவர் உருவாக்கி, வளர்த்தெடுக்க தன் வாழ்நாளையே அர்ப்பணித்த போது, அதற்கு ஈடாக, அவரையும், அவர் சார்ந்த அனைவரையும் அரவணைத்து, அவரது நல் முயற்சிகளுக்கு துணையாக இருந்து தோள்கொடுத்து சாரதாஸ் வளர்ச்சிக்கு ஈடாக, எங்கள் குடும்பத்தையும் கட்டி காப்பாற்றி வளர்த்தெடுத்த எங்கள் அன்னை, தாயார் திருமதி. சுதா மணவாளன் அவர்கள் திருக்கரங்களால் எங்கள் தந்தையின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவே நாங்கள் அவருக்கு செலுத்தும் உண்மையான நினைவஞ்சலியாக இருக்கும்.

சாரதாஸ் மையப்பகுதியில், டிஜிட்டல் சுவரின் மத்தியில் வசீகரிக்கும் அன்பின் உருவமாக அமைந்திருக்கும் அமரர் மணவாளன் அவர்களின், இந்த உருவப்படம் அவரது உயிரோட்டமாக இருந்து என்றென்றும் அவர் வாடிக்கையாளர்களை பார்த்துக் கொண்டே இருக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களும் அவரத இன்முகத்தை காணும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மணவாளன் அவர்கள் சாரதாஸின் மையப்பகுதியில் இன்றும், என்றும், என்றென்றும் படமாகவும், அவரது ஜவுளி சாம்ராஜ்யத்தை பார்த்தும் வியக்கும் வகையில் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக அமைந்திருக்கும் என்றும் நம்புகிறோம்.

நினைவேந்தல் நிகழ்வின், தொடர்ச்சியாக, வரும் 26ம்தேதி சனிக்கிழமை மாலை ஐயா மணவாளன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இவ்விழாவில், ‘சிகரம் தொட்ட பக்கங்கள்’ என்ற தலைப்பில் ஒரு சாமானியராக பிறந்து சக்கரவர்த்தியான சாரதாஸ் மணவாளன் அவர்களது சரித்திர சாதனையை பறைசாற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. அதோடு, அவர் தனது குடும்ப உறுப்பினர்களாக கருதும் சாரதாஸ் பணியர்களில் மூத்தவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும் இரவு 8.30 மணி அளவில் சிகரம் தொட்ட பக்கங்கள் ஆவணப்படம் சாரதாஸ் திருச்சி யு டியூப் (Sarathastrichy )சேனல் வாயிலாகவும் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision