கையூட்டு பெற்ற சார்நிலை கணக்கர்- 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கையூட்டு பெற்ற சார்நிலை கணக்கர்- 3 ஆண்டுகள் சிறை தண்டனை

சோ.நல்லையன், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுகாம்பூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பவரின் பணிமுதிர்வின்போது, அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க ரூ.500/- கையூட்டு கேட்டு பெற்ற வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, வயது 62 த/பெ.நம்பியப்பன், முன்னர் கணக்கர், சார்நிலை கருவூலம், லால்குடி, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.

சோ.நல்லையள், உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளிட சிறுகாம்பூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பவரின் பணிமுதிர்வின்போது அவரது கணக்கில் இருக்கும் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பை பணமாக்கி தர, கையூட்டாக ரூ.500/- கேட்டது தொடர்பாக, திருச்சி மாவட்டம்,லால்குடி சார்நிலை கருவூவத்தில் கணக்கராக பரியாற்றிய கிருஷ்ணமூர்த்தி மீது திருச்சி ஊ.த.க பிரிவு கு.ண் .22008 சட்ட பிரிவு 7 of PC Act 1988-ன்படி கடந்த 15.03.2008ம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 அதனை தொடர்ந்து 17.03.2008ந்தேதி மேற்கொண் பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சோ.நல்லையன் என்பவரிடம் கையூட்டு பணம் ரூ.500/-ஐ கேட்டு பெற்ற போது எதிரி திருகிருஷ்மனமூர்த்தி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் 

கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவற்று 13.07.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் . கிருஷ்ணாமுர்த்தி வயது 62/2023, த/பெ.நம்பியப்பள், முன்னர் கணக்கர், சார்நிலை கருவூலம். லால்குடி, திருச்சி மாவட்டம் என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டளையும்.ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் , ரூ.20.000/- அபராதமும், அராதத்தை கட்ட தவறியால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தாவிட்டார். மேற்படி வழக்கினை ஞா.சக்திவேல், காவல் ஆய்வாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு வழக்கறிஞாக சுரேஷ்குமார் அவர்கள் திறம்பட வழக்கினை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn