கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா
இன்றைய சமூக நிலையில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெறவேண்டும்- மகளிர் தின விழாவில் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பேசினார்.
கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் இயக்குநர் அருள் பணி G.சாமிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி திரிவேணி, நாட்டுப்புறக் கலைஞர் திருநங்கை கே.வர்சா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நீதிபதிக்கு "சிறந்த சாதனைப் பெண்மணி விருது - 2021" மற்றும் நாட்டுப்புறக் கலைஞர வர்ஷா-விற்கு "சிறந்த மக்கள் கலைஞர்- 2021" விருதினை கல்லூரி இயக்குநர் வழங்கி கௌரவித்தார்..
நிகழ்வின்போது நீதிபதி திரிவேணி சிறப்புரையாற்றுகையில், "பெண்களுக்கு எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தருவது மட்டும் சமஉரிமை ஆகாது. அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். பெண்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். முடிவெடுப்பதில் பெண்கள் அழகானவர்கள். தொழில்நுட்பம், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாத் துறைகளிலும் பெண்கள் செயலாற்றினாலும் முன்னேற்ற விகிதத்தில் ஆறாயிரம் பேருக்கு ஆறு பேர்களே உள்ளனர். சுதந்திரம் என்பது நமக்கு பிடித்ததை செய்வது மட்டுமல்ல நமக்கு பிடிக்காததை செய்யாமல் இருப்பதும் கூட. சாதிப்பதற்கு முகமோ நிறமோ குடும்பப் பின்னணியோ தேவையில்லை. நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் சமூகத்தில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு பெறவேண்டும். சட்டங்கள் துணை இருந்தாலும்கூட பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும்", என்றார்.
நீதிபதியின் சிறப்புரையைத் தொடர்ந்து திருநங்கை கே.வர்ஷா கட்டைக்கால் ஆட்டம் நிகழ்த்தினார். அதன்பின்பு பேசிய அவர், "திருநங்கைகள் மீதானப் பார்வை மாறுபட தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. நாட்டுப்புறக் கலைதான் என்னை உயர்த்தி வருகிறது. ஏளனமும் இழிவும் புறக்கணிப்பும் உள்ள இடத்தில் திருநங்கைகள் கலைகளை கற்று முன்னேறி வெல்லவேண்டும். அதற்கான வாய்ப்பை எல்லா நிலைகளிலும் சமூகம் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும். திருநங்கைகள் நாட்டுப்புறக் கலைகளில் சாதிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது. சமவாய்ப்பை சமூகம் தான் தர வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து திருநங்கை வர்ஷா கட்டைக்கால் ஆட்டம் நிகழ்த்தினார். திருநங்கைகள் மீதானப் பார்வை மாறுபட தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. நாட்டுப்புறக் கலைதான் என்னை உயர்த்தி வருகிறது. ஏளனமும் இழிவும் புறக்கணிப்பும் உள்ள இடத்தில் திருநங்கைகள் கலைகளை கற்று முன்னேறி வெல்லவேண்டும். அதற்கான வாய்ப்பை எல்லா நிலைகளிலும் சமூகம் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும். திருநங்கைகள் நாட்டுப்புறக் கலைகளில் சாதிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
சமவாய்ப்பை சமூகம் தான் தர வேண்டும் என்றார்.
நிகழ்வில் நீதிபதிக்கு சிறந்த சாதனைப் பெண்மணி விருது - 2021 மற்றும் வர்ஷா அவர்களுக்கு சிறந்த மக்கள் கலைஞர்- 2021 விருதினை கல்லூரி இயக்குநர் வழங்கி சிறப்பித்தார்.பாலின மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவிப்ரோசிரியர் வரவேற்புரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்தார். பேரா.ஆக்னஸ் சர்மீளி நன்றி கூறினார். முதுகலை நடன மாணவி ரூபாவதி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I