திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஆய்வு செய்த துணை முதல்வர்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கடந்த மே 9 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பேட்டரி காரில் தரைத் தளம், மேல் தளம் மற்றும் நகரும் படிக்கட்டுகளில் பயணித்து,பேருந்து நிலைய அம்சங்களை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
முன்னதாக, பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையை பார்வையிட்டு, அமைச்சர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இவ்வாய்வின்போது, அமைச்சர் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, பெரிய கருப்பன், மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision