காந்தி மார்க்கெட்டில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

காந்தி மார்க்கெட்டில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 மாம்பழ குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கான ரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் ரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்ததில் 4 குடோன்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் ரசாயனம் தெளிக்கப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவற்றை திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் காவல்துறையினர், மாநகராட்சி ஆய்வாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டன. மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் படி மூன்று உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தனர்.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்.. திருச்சி மாவட்டத்தில் மாம்பழங்கள் மற்றும் பழங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்பவர்கள் ரசாயனம் தெளித்து பழங்களை பழுக்க வைக்க கூடாது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உணவு பாதுகாப்பு துறை நிர்ணய தர நிர்ணய சட்டம் 2006 இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதுபோன்ற உணவு சம்பந்தமான பல படங்களுக்கு பொதுமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட

புகார் எண் 

9585959595
9944959595

மாநில புகார் எண்
9444042322

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve