டெல்டா மாவட்ட துணைத் தலைவர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் முக்கிய மூன்று கோரிக்கை மனு

டெல்டா மாவட்ட துணைத் தலைவர் ஜமாபந்தி நிகழ்ச்சியில்  முக்கிய மூன்று கோரிக்கை மனு

இன்று நடைபெற்ற ஜமாபந்தி  தலைவருக்கு நா. ராஜேந்திரன் டெல்டா மாவட்ட மண்டல துணைத் தலைவர் அவர்கள் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். முதலாவதாக  வயலூர்,முள்ளிகரும்பூர், குழுமணி,பேரூர், மருதண்டாகுறிச்சி, கீழ வயலூர்,சோமரசம்பேட்டை, விவசாய நிலப்பகுதியில் வேளாண் மண்சாலை அமைத்துக் கொடுக்கவும்

அதன் பின்பு குமாரவயலூர் கோயில் செல்லும் சாலை ஒரு கிலோ மீட்டர் வரை குறுகிய அளவில் உள்ளதால் அதை சரி செய்து தரவும், உய்யக்கொண்டான் ஆற்று பாசன வாய்க்காலை நேரடியாக  வருவாய் துறை மூலம் அளவீடு செய்து விவசாய பயன்பாட்டிற்கு நீர் தேவைக்கு போக உபரி இடத்தை நீர்வள துறையிடம் முறைப்படி கையகப்படுத்திவயலூர் தெப்பக்குளம் முதல் தென்னந்தோப்பு வரை புதிய சாலைகள் அமைக்க வேண்டும். 

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சோம்பரசம்பேட்டை, எட்டரை,கோப்பு,புலியூர் பேரூர், மருதண்டாகுறிச்சி பகுதிகளில் லாட்டரி சீட்டு மற்றும் மது வகைகள் தனிநபர்களால் கிராமம் தோறும் விற்கப்படுகின்றன.அதை தடை செய்ய தகவல் தொடர்பாளர் அந்தந்த வருவாய் கிராமத்தில் நியமனம் செய்து அவர்களுக்கு மாந்தோறும் கூட்டம் நடத்தி கிராமங்களை செம்மை படுத்த வேண்டும் என்று தனது மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision