தமிழக சபாநாயகர் சென்ற விமானம் அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்

தமிழக சபாநாயகர் சென்ற விமானம் அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கம்

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு
வழக்கம்போல் 12.20 புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 12.50க்கு தமிழக சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட 51 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் தூத்துக்குடி பகுதியில் கன மழை காரணமாக வானிலை மோசமாக உள்ளதால் விமானத்தை தரையிறக்க முடியாது விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அப்போது தூத்துக்குடியில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ சிறிய ரக விமானம் திருச்சியில் மதியம் 3.30மணிக்கு தரையிறக்கப்பட்டது. பயணிகள் விமானத்திற்க்குளே அமர வைக்கபட்டனர். ஒரு மணி நேரத்திற்க்கு பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் வானிலை சரியான உடன் மீண்டும் திருச்சியிலிருந்து மாலை 4.30 தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. 5.05 மணிக்கு 51 பயணிகளுடன் பத்திரமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

சென்னையில் 12.50 க்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் மாலை 1.50க்கு தூத்துக்குடியில் தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் 5.05 மணிக்கு தூத்துக்குடியில் இறங்கியதால் சுமார் 4 மணி நேரமாக விமானத்திற்க்குள் பயணிகள் சிறு பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn