திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப் கார் வசதி - திருச்சி மக்களின் 40 ஆண்டுகால எதிர்பார்ப்பு

திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப் கார் வசதி - திருச்சி மக்களின் 40 ஆண்டுகால எதிர்பார்ப்பு

மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுங்குன்றம் மலைக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து மற்ற கோவில்களுக்கு ரோப் கார் வசதி அமைப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ள நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மக்கள் 273 அடி உயரமுள்ள மலைக்கோயிலுக்குச் செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன.

இந்தப் படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்குச் செல்வதற்குள் ரொம்ப சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். நடக்க முடியாதவர்களும் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச் சென்று விடுகின்றனர். ஆகையால் ரோப் கார்  அமைத்துத் அமைத்திட வேண்டும் என்பது திருச்சி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn