புத்தகம் வடிவில் அமர்ந்து வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

புத்தகம் வடிவில் அமர்ந்து வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

திருச்சியில் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி புத்தக திருவிழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் திருச்சி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக லால்குடி நகராட்சி சார்பில் எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நகராட்சி ஆணையர் குமார் முன்னிலையில், நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமையில், நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு புத்தக திருவிழா விழிப்புணர்வு வழங்கும் வகையில் புத்தக வடிவில் அமர்ந்து ஒரு மணி நேரம் வாசிப்பு திறனை வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவிகள் தினமும் வாசித்து தங்களுடைய அறிவுத்திறனையும் வாசிப்பு திறனை மேம்படுத்தி கொள்ள முன்வர வேண்டும். அனைவரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டுபயன் பெறவேண்டும், மேலும் பள்ளி மாணவிகள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு வாசித்து திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆணையர் குமார் தெரிவித்தார். இதில் பள்ளி தலைமையாசிரியர் நளினா, நகரமைப்பு ஆய்வர் ஜெய்சங்கர், துப்புறவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision