திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தைக் கொட்டி சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்!!

Advertisement

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையினால் சின்ன வெங்காய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நரசிங்கபுரம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

Advertisement

அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த சின்ன வெங்காயத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் கொட்டி தரையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். 

Advertisement

பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் திருச்சி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.