நள்ளிரவில் குழந்தைகளுடன் தவித்து நின்ற தம்பதியினருக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

நள்ளிரவில் குழந்தைகளுடன் தவித்து நின்ற தம்பதியினருக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

கோயபுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுமதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சுமதியின் அப்பா இறந்துவிட்டதால், கடந்த 2.06.2021 அன்று இரவு கோயம்புத்தூரில் இருந்து திருச்சி மலைக்கோட்டை பாபு ரோட்டில் உள்ள அவர்கள் இல்லத்திற்கு இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது குளித்தலை குறப்பாளையம் பகுதியில் அவர்களது இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசர் கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த அவர்களைக் கண்டு விசாரித்த போது அப்பாவின் இறப்புக்கு சென்று கொண்டிருந்த போது வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது என்று தெரிந்தவுடன் பஞ்சர் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்த போது மழை காரணமாகவும், ஊரடங்கு காலம் என்பதாலும் கடைகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தனது நண்பர் விஜய் மக்கள் இயக்க தலைவர் சதாசிவத்தை தொடர்பு கொண்டு அவரது கார் மூலம் திருச்சியில் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு வருமாறு கூறப்பட்டது.

அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டு அவர்களை திருச்சியில் அவர்களது இல்லத்தில் இறக்கி விட்டனர். இந்த ஊரடங்கு காலத்தின் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ததற்கு நெகிழ்ச்சியுடன் காவல்துறையினருக்கு மனமார நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC