நாளை ( 05.06.2021 ) தடுப்பூசி முகாம் நடைபெறாது. திருச்சி ஆட்சியர் தகவல்

நாளை ( 05.06.2021 ) தடுப்பூசி முகாம் நடைபெறாது. திருச்சி ஆட்சியர் தகவல்

கொரோனா தொற்று 2 அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் வருகிறது. இதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் நான்கு கோட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வயதினருக்கு ஏற்றார்போல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு கொடுத்த 18,000 தடுப்பூசிகள் நேற்றும், இன்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் தற்போது திருச்சி மாவட்டத்தில் தடுப்பு ஊசிகள் கையிருப்பு நிலையினை கருத்தில் கொண்டு நாளை 5/6/2021 நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றவுடன் முகாம்கள் மீண்டும் செயல்படுவது குறித்து தெரிவிக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC