விமான விபத்து ஏற்பட்டால் மீட்பது எப்படி - திருச்சி விமான நிலையத்தில் ஒத்திகை!!

விமான விபத்து ஏற்பட்டால் மீட்பது எப்படி - திருச்சி விமான நிலையத்தில் ஒத்திகை!!

இந்திய அளவில் இரண்டாம் நிலை விமானநிலையங்களில் நவீன தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட வசதிகள், அனுபவம் மற்றும் திறமை மிக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்களை அதிகம் கொண்ட விருது வாங்கிய விமானநிலையம் நம்முடைய திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் ஆகும்.

Advertisement

இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றது. எதிர்பாராத விதமாக விமான ஓடுதளத்தில் விமான விபத்து ஏற்பட்டால் விமானப்பயணிகளையும் விமானத்தையும் மீட்பது எப்படி என நேற்று (11-12-2020) திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது. 

ஒத்திகை நிகழ்வில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழுவும், திருச்சிராப்பள்ளியின் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவமனை, எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, காவிரி மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகிய மருத்துவமனையின் ஊழியர்கள் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Advertisement

விமான விபத்து ஏற்படும்போது மீட்கும் நடவடிக்கைகளை தத்துரூபமாக அப்படியே ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினை செய்து காட்டினார்கள்.