திருச்சியில் துப்பாக்கியை காட்டி செயின் பறித்து குழந்தையை கடத்த முயற்சி - பரபரப்பு

May 18, 2023 - 17:39
May 18, 2023 - 17:44
 1015
திருச்சியில் துப்பாக்கியை காட்டி செயின் பறித்து குழந்தையை கடத்த முயற்சி - பரபரப்பு

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்தவர் சத்யன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் கோயிலுக்கு சென்று விட்டு வரும் போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் நேற்று இரவு உணவு சாப்பிட்டார்.

பின்பு மனைவி, குழந்தையையும் காரில் அமர சொல்லி தான் பில் செலுத்தி விட்டு வருவதாக சொல்லி உள்ளார். காருக்கு வந்த மனைவி மகளையும் மர்ம நபர் ஒருவர் (கையில் துப்பாக்கி வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார்கள்) அவர் செயினை பறித்து குழந்தையை தூக்கி கொண்டு ஓட முற்பட்டுள்ளார்.

மனைவி கூச்சலிட்டவுடன் மற்ற ஓட்டுநர்கள் உணவு அருந்தியவர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ஒரு கட்டத்தில் அவர் சுட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். பின்பு குழந்தையும் நகைகளையும் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளையும் நேரில் பார்த்து உள்ளார். தொடர் விசாரணையில் தற்பொழுது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இவரை கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார். அவர் செம போதையில் உள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சியில் வழிப்பறி நடைபெறுவதை தொடர்ந்து தடுக்க ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் துப்பாக்கியை வைத்து ஒருவர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn