"அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை - எதிர்க்கட்சியின் வாக்குறுதியை மக்கள் நம்ப தயாராகயில்லை" - திருச்சியில் ஜி.கே வாசன் பேட்டி!!

"அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை - எதிர்க்கட்சியின் வாக்குறுதியை மக்கள் நம்ப தயாராகயில்லை" - திருச்சியில் ஜி.கே வாசன் பேட்டி!!

திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் மறைந்த புலியூர் நாகராஜன் படத்தை திறந்து வைத்தார்.

Advertisement

பின்பு ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்..."தனது இறுதி மூச்சுவுள்ள வரை விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்ட புலியூர் நாகராஜன் மறைவு கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு, கட்சியின் சார்பில் ₹3 லட்சம் ஆறுதல் தொகையாக கொடுக்கப்படுகிறது.

விவசாயிகளின் வருவாய் , அவர்களது வளர்ச்சி, பாதுகாப்பு என்ற நம்பிக்கையை அடிப்படையாக சட்டத்திருத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.

அரசியலுக்காக எதிர்பது ஏற்புடையது அல்ல. இலக்கு நிர்ணகித்து கொள்முதல் செய்வது கூடாது. நெல் வரத்துக்கு ஏற்ப ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் செய்ய வேண்டும்.

யூரியா தட்டுப்பாடு இல்லாமலும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, பயிர்கடன் கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மணப்பாறை பாரதியார் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர் தமிழகம் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழக மக்கள் நலனை மையமாக வைத்து எடுத்த முடிவாக உள்ளதால்வரவேற்கிறேன்.

தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ப, நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். கிராம பகுதி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு தேவை. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் , அரசின் கொள்கைக்கு ஏற்ப அதிக பொருப்போடு நடந்துக்கொள்வது நல்லது. அவரவர் தனி சின்னத்தில் போட்டியிடுவதை பொருத்தவரையில், அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. எதிர்கட்சிகள் அள்ளிவீசும் வாக்குறுதிகளை மக்கள் நம்பத்தயாராகயில்லை.

மேலும் அரசியல் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து, அதிமுக தலைமை முடிவு செய்யும்.