வைகுண்ட ஏகாதசி (25ம் தேதி)அன்று முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி கிடையாது - மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

வைகுண்ட ஏகாதசி (25ம் தேதி)அன்று முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி கிடையாது - மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் நாளை பகல்பத்து உற்சவம் துவங்க உள்ள நிலையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஸ்ரீரங்கம் கோவிலில் புறக்காவல் நிலையம் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

வைகுண்ட ஏகாதசி (25ம் தேதி)அன்று முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி கிடையாது. 24ம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை பக்தர்கள் அனுமதி கிடையாது. ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் காவல் ஆணையர் லோகநாதன் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

எந்தவித சிறப்பு அனுமதி அட்டைகளும் வழங்கப்படாது. 20 நாட்கள் திருவிழாவில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 600 பேர் மட்டுமே அனுமதி. வைகுண்ட ஏகாதசி என்று ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.

Advertisement

மற்ற உற்சவ நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் இல்லை என்றால் கோவில் வாசலில் கூட்டம் குறைவாக இருக்கும் பொழுது டோக்கன் வழங்கப்படும். 20 நாட்களில் உபயதாரர்கள் கூட சிறப்பு அனுமதி கிடையாது .

நாளை பகல் பத்து முதல் நாள் உற்சவம் துவங்குகிறது ஜனவரி 2021, 4 ம் தேதி 20 நாட்கள் உற்சவம் நிறைவு பெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.