திருச்சியில் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் - குடோன் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
திருச்சி காந்தி மார்க்கெட் முகமது ஜின்னா தெருவில் குடோன் ஒன்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் மாநகர உதவி ஆணையர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார்.
இதன் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கேரி பேக்குகள் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் குடோன் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார ஆய்வாளர் தெரிவித்துக் கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn