திருச்சியில் இனி ரவுடிகளுக்கு இடமில்லை - டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

திருச்சியில் இனி ரவுடிகளுக்கு இடமில்லை - டிஐஜி பகலவன் அதிரடி பேட்டி

திருச்சி சிறுவனூர் அருகே சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஜெகனை பிடிக்க சென்ற திருச்சி மாவட்ட போலீசார் மீது ரவுடி தாக்குதல் நடத்தியதால் ரவுடி ஜெகன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது இதில் ரவுடி ஜெகன் தாக்கப்பட்டதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ஐ ஜி பகலவன்.... திருச்சி ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடி சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கை துப்பாக்கி, மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்தை வைத்து தாக்க முற்பட்டார். இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்துள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது. நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை ஸ்பெஷல் பிரான்ச் போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் சனமங்கலம் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் பணம் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கு பன்றி மேய்க்கும் தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் கிடைத்தது.

அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொழுது, ஜெகன் என்ற இந்த நபர் அங்கு இருந்தார். தேடப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்பொழுது துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டார். இதனால் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு 6 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 வழக்கில் ஈடுபட்டுள்ளார். இதில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை என டிஐஜி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision