விவசாயி வாகனம் பறிமுதல் நாங்களே உயிரை பணயம் வைத்து பணியில் இருக்கிறோம் என கடுமை காட்டிய காவல்துறை

விவசாயி வாகனம் பறிமுதல் நாங்களே உயிரை பணயம் வைத்து பணியில் இருக்கிறோம் என  கடுமை காட்டிய காவல்துறை

திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் விவசாயி. இவருடைய நிலம் இரண்டரை ஏக்கர் காட்டூர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் எள்  விவசாயம் செய்து வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தளர்வில்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் விவசாயத்திற்க்கும் விளைபொருட்களுக்கு  தடையின்றி செல்ல அவர்கள் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன் அடிப்படையில் வேளாண்துறை உதவி இயக்குநரிடம்  விவசாய நிலத்துக்கு செல்வதற்காகவும் விவசாய பயிர்களை பாதுகாக்கவும் அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று காட்டூர் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்க்கு  சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பால்பண்ணை அருகே வந்த போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். நீங்கள் ஏன் வெளியில் வந்தீர்கள் உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

விவசாயம் செய்து என்ன ஆகப்போகிறது நாங்களே உயிரை பணையம் வைத்து இப்பணியில் இருக்கிறோம் என்று கூறி அவரை அவமானப்படுத்தி அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்து   அதற்கான ரசீதையும் கொடுத்தனர்.வேளாண்துறையினரின் உரிய அனுமதி இருந்தும் தன் விவசாய பணிகளுக்காக சென்று திரும்பும் போது காவல்துறை கடுமையாக நடந்து கொண்டது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயி ராம்குமார் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு செல்வதற்கு தடை இன்றி செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். தொடர்ந்து அவர் காவல் நிலையம் சென்று இதற்காக அனுமதி பெற்று இருப்பதற்கான அனுமதியையும் காண்பித்த பிறகு சரியான அனுமதி தான் பெற்றுள்ளீர்கள் ஆனால் வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டோம் என்று காவல்துறையினர் பதிலளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள

https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx