ஸ்ரீரங்கம் மேலூரில் கைப்பந்து போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!!

ஸ்ரீரங்கம் மேலூரில் கைப்பந்து போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!!

Advertisement

இளைஞர் கவினுலகு திட்டத்தின் தொடர்ச்சியாக திருச்சி மாநகரில் ஶ்ரீரங்கம் மேலூரில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 14.02.21 தேதி முதல் 15.02.21 தேதி வரை Y.B.C மேலூர் கையுந்து அணி இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டிகளில் 15 அணிகள் கலந்து கொண்டனர். 

Advertisement

முதல் இடத்தைப் பிடித்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒன்றாம் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 10,000-யும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மேலூர் R.V.R பிரதர்ஸ் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 8,000-யும், மூன்றாம் இடத்தைப் பிடித்த அன்பில் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 6000-யும், நான்காம் இடத்தைப் பிடித்த Y.B.C மேலூர் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 4,000-யும் வழங்கப்பட்டது. 

இவ்விளையாட்டு போட்டியை திருச்சி மாநகர ஸ்ரீரங்க உதவி ஆணையர், திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க துணைத்தலைவர் குணா மற்றும் இணைச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையினை சுழல் கோப்பைகளையும் வழங்கினார்கள். 

Advertisement

இப்போட்டியில் கலந்து கொண்ட, பரிசு பெற்ற மற்றும் போட்டியை ஏற்பாடு செய்த அனைவரையும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள்.